உயிர்காக்கும் சமுதாயச் சேவைகள் & திட்டங்கள்
விழிப்புணர்வு முதல் பதிவு வழிகாட்டல் வரை எங்களின் பல்வேறு சமுதாயப் பணிகள்.
கல்லூரி & பள்ளி விழிப்புணர்வு
இளம் தலைமுறையினரிடம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சிறப்புப் பயிலரங்குகள் மற்றும் விவாதங்கள்.
கார்ப்பரேட் CSR கூட்டாண்மை
நிறுவனங்களில் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் தன்னார்வ உறுப்பு தான உறுதிமொழி முகாம்கள்.
24/7 அவசர உதவி மையம்
உறுப்பு தானம் தொடர்பான சந்தேகங்கள், மருத்துவமனை வழிகாட்டல்கள் மற்றும் அவசர ஆலோசனைகளுக்கு +91 99400 40010 தொடர்பு கொள்ளலாம்.
டிஜிட்டல் உறுதிமொழி அட்டை
எளிய முறையில் இணையம் வழியாகப் பதிவு செய்து அதிகாரப்பூர்வ உறுப்பு தான உறுதிமொழி அட்டையை உடனே பதிவிறக்கும் வசதி.
குடும்ப கவுன்சிலிங் & ஆதரவு
மூளைச்சாவு ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளில் கொடையாளரின் குடும்பத்திற்குத் தேவையான மருத்துவ மற்றும் மனநல வழிகாட்டல்கள்.
கிராமப்புற விழிப்புணர்வு ஊர்வலங்கள்
கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தெருக்கூத்துகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள்.